ரூ.68 கோடி திரட்டியது ஸ்வீட் காரம் காபி

சென்னை:சென்னையைச் சேர்ந்த ஸ்வீட் காரம் காபி நிறுவனம், பீக் எக்ஸ்.வி.பார்ட்னர்ஸ், பயர்சைடு வெஞ்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து, 68 கோடி ரூபாய் முதலீட்டை திரட்டி உள்ளது.

கடந்த 2015ல் துவங்கப்பட்ட ஸ்வீட் காரம் காபி நிறுவனம், அப்பளம், வடகம், ஊறுகாய், நொறுக்குத்தீனிகள், இனிப்புகள் உள்ளிட்டவற்றை தயாரித்து, 32 நாடுகளில் விற்பனை செய்து வருகிறது. மேலும், தன் தயாரிப்புகளை 2,500 குயிக் காமர்ஸ் ஸ்டோர்களிலும் இடம் பெறச் செய்துள்ளது. இந்த நிதி திரட்டல் வாயிலாக கிடைத்த முதலீட்டை, புதிய தயாரிப்புகளை மேம்படுத்தவும், வினியோகத் தொடரை பலப்படுத்தவும் பயன்படுத்த உள்ளதாக இந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Advertisement