ஆதார், ரேஷன் கார்டுகளை ஒப்படைப்போம் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கோபம்
சென்னை:''மானிய கோரிக்கையில், எங்களின் கோரிக்கைகள் தொடர்பான அறிவிப்பு வராவிட்டால், ஆதார், ரேஷன் கார்டுகளை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையிடம் ஒப்படைப்போம்,'' என, தேசிய பார்வையற்றோர் கூட்டமைப்பின் தமிழக பொதுச்செயலர் பாபு எழில் குணாளன் தெரிவித்தார்.
அவரது பேட்டி:
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளில், புத்தகம் கட்டுநர் பயிற்சியை நிறைவு செய்தோர் மற்றும் பட்டப்படிப்பு மற்றும் அரசு சான்றிதழ் படிப்புகளை நிறைவு செய்தோருக்கு, அரசு வேலை வேண்டி, கடந்த மாதம், 17ம் தேதி முதல் பத்து நாட்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம்.
இருப்பினும், வேலை கிடைக்கவில்லை. துறை செயலருடன் நடந்த பேச்சுக்கு பின், போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளோம். தற்போது, 'எழுதுபொருள், அச்சுத்துறையில், புத்தகம் கட்டுநர் பயிற்சியை நிறைவு செய்தோருக்கு வேலை இல்லை' என, அதிகாரிகள் கூறுகின்றனர்.
எனவே, அரசு பல்கலை மற்றும் கல்லுாரிகளில் செயல்படும் பொது நுாலகம் மற்றும் ஆவணக் காப்பகங்களில் வேலை வழங்க வேண்டும். உதவித்தொகையை, 3,000 ரூபாயாக உயர்த்த வேண்டும்.
துறை சார்பில் வழங்கப்பட உள்ள, 'டெலி மெடிஷன்' பயிற்சிக்கு மாறாக, மாற்றுத்திறனாளிகளின் விருப்பத்திற்கு ஏற்ப, தொழில் பயிற்சி வழங்க வேண்டும்.
அதேபோல், பஸ் நிலைய கழிப்பறை பராமரிப்புக்கான, 'டெண்டர்', வரும் காலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து, துறை செயலரிடம் தெரிவித்துள்ளோம்.
எனவே, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானிய கோரிக்கையின் போது, எங்களது கோரிக்கை தொடர்பான அறிவிப்புகள் வராவிட்டால், அடுத்த கட்டமாக, ஆதார், ரேஷன் கார்டுகளை நலத்துறையிடமே ஒப்படைப்போம். தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
யாருடனும் கூட்டணி இல்லை; சீமான் மீண்டும் திட்டவட்டம்
-
பா.ஜ., மாநில தலைவருக்கான போட்டியில் இல்லை: அண்ணாமலை
-
தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
-
சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு இல்லை: வாகனங்களுக்கு மட்டுமே : சென்னை ஐகோர்ட்
-
இரு நாட்டு உறவை கெடுக்கும் வகையில் செயல்படக்கூடாது: முகமது யூனுசிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்
-
புதிய மதம் வரப்போகுது : இமாம் புது தகவல்