நெடுஞ்சாலையில் தலைதொங்கிய 'சிசிடிவி' கேமரா சீரமைக்க வலியுறுத்தல்

ஸ்ரீபெரும்புதுார்:சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, வண்டலுார் -- வாலாஜாபாத் நெடுஞ்சாலை, திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளை இணைக்கும் சாலையாக, ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலை உள்ளது
ஒரகடம், வல்லம் -வடகால், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள தொழிற்சாலைகளின் பணிபுரியும் லட்சக்கணக்கான ஊழியர், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பேருந்து, கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் தினமும் இந்த சாலையின் வழியே சென்று வருகின்றனர்.
நெடுஞ்சாலையின் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், விபத்து ஏற்படுத்தும் வாகனங்களை கண்டறியவும், முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தி போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் வல்லம் அடுத்த, வடகால் சந்திப்பில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து உள்ளது.
இதனால், குற்ற சம்பவங்கள், மற்றும் விபத்து ஏற்படும் போது, போலீசார் குற்றவாளிகளை கண்டறிய முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே, நெடுஞ்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராவை சீரமைத்து, முறையாக பராமிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
யாருடனும் கூட்டணி இல்லை; சீமான் மீண்டும் திட்டவட்டம்
-
பா.ஜ., மாநில தலைவருக்கான போட்டியில் இல்லை: அண்ணாமலை
-
தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
-
சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு இல்லை: வாகனங்களுக்கு மட்டுமே : சென்னை ஐகோர்ட்
-
இரு நாட்டு உறவை கெடுக்கும் வகையில் செயல்படக்கூடாது: முகமது யூனுசிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்
-
புதிய மதம் வரப்போகுது : இமாம் புது தகவல்