விரிவாக்கம் செய்த சாலைகளில் மின் விளக்கு ஏற்படுத்த வலியுறுத்தல்

வாலாஜாபாத்:சென்னை --- கன்னியாகுமரி தொழிற்தடம் திட்டம் சார்பில், காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலை விரிவாக்க பணி, இரண்டு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே, 21 அடி அகலமாக இருந்த இச்சாலை, தற்போது 50 அடியாக அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக 39 கி.மீ., தூரத்திற்கான சாலை அகலப்படுத்துதல் மற்றும் புதிய பாலங்கள் அமைத்தல், தேவையான இடங்களில் கான்கிரிட் தடுப்பு ஏற்படுத்துதல், வடிகால்வாய் உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதில், செங்கல்பட்டில் இருந்து, வாலாஜாபாத் அருகாமையில் உள்ள புளியம்பாக்கம் வரை மற்றும் வெண்குடி, ஒட்டிவாக்கம், திம்மராஜம்பேட்டை, கருக்குப்பேட்டை
வரையிலான சாலைகளில் 90 சதவீதம் பணிகள் முடிவுற்று இரவு, பகலாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் இயங்குகின்றன.
இச்சாலையில், ஏற்கனவே ஊராட்சி சார்பில் நிர்வகிக்கும் ஒருபுற சாலையோர மின் கம்பங்களில் தெருவிளக்கு ஒளிர்கின்றன. எனினும், விரிவாக்கம் செய்யப்பட்ட சாலையின் மற்றொரு புறம் மின்விளக்கு வசதி ஏற்படுத்தாமல் உள்ளது.
இதனால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
திம்மராஜம்பேட்டை, பூசிவாக்கம், வெண்குடி, வாலாஜாபாத்தின் புறவழிச்சாலை துவக்க பகுதி போன்ற அபாயகரமான சாலை வளைவுகளில் மின் விளக்கு வசதி இல்லாததால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.
எனவே, காஞ்சிபுரம்- - செங்கல்பட்டு சாலையில், விரிவாக்கப் பணி மேற்கொண்ட பகுதிகளில் புதியதாக மின்கம்பங்கள் அமைத்து, மின் விளக்கு வசதி ஏற்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும்
-
யாருடனும் கூட்டணி இல்லை; சீமான் மீண்டும் திட்டவட்டம்
-
பா.ஜ., மாநில தலைவருக்கான போட்டியில் இல்லை: அண்ணாமலை
-
தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
-
சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு இல்லை: வாகனங்களுக்கு மட்டுமே : சென்னை ஐகோர்ட்
-
இரு நாட்டு உறவை கெடுக்கும் வகையில் செயல்படக்கூடாது: முகமது யூனுசிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்
-
புதிய மதம் வரப்போகுது : இமாம் புது தகவல்