தாழ்வாக செல்லும் மின்கம்பியால் விபத்து அபாயம்

நத்தப்பேட்டை:காஞ்சிபுரம் மாநகராட்சி 27வது வார்டு, நத்தப்பேட்டை ரயில் நிலையத்திற்கு செல்லும் சாலையோரம் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க சாலையோரம் மின்தட பாதைக்காக மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், சாலை வளைவு பகுதியில் உள்ள மின்கம்பம் எண் 99ல் உள்ள மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன.

இதனால், வைக்கோல் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் செல்லும்போதோ, கனரக வாகனங்கள் எதிரெதிரே வரும்போதோ, மின்தட பாதையை ஒட்டி சாலையோரம் ஒதுங்கும் வாகனம்இ மின் கம்பியில் உரசி மின் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.

எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், தாழ்வாக செல்லும் மின் கம்பியை இழுத்து கட்டி சீரமைக்க மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement