முன்விரோத தகராறு  வாலிபர் கைது 

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே முன்விரோத தகராறில், வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி அடுத்த கணங்கூர் கிராமத்தை சேர்ந்த சடையவேல் மகன் சுரேந்திரன்,27; இவரது சித்தப்பாவிடம், அதே ஊரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் பூவரசன்,25; அடிக்கடி மதுபோதையில் தகராறு செய்து வந்தார்.

இதனால் ஏற்பட்ட பிரச்னையில் இருவருக்கும் முன்விரோதம் இருந்தது. இந்நிலையில், கடந்த 2ம் தேதி கணங்கூர் மாரியம்மன் கோவில் அருகே நடந்து சென்ற சுரேந்திரனை, உருட்டு கட்டையால் பூவரசன் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து பூவரசனை கைது செய்தனர்.

Advertisement