கனடாவில் இந்தியர் கத்தியால் குத்திக்கொலை

1


ஒட்டாவா: கனடாவின் ராக்லேண்டில் இந்தியர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவின் ராக்லேண்டில் இந்தியர் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார் என போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. பின்னர் விசாரணையில், கொலை நடந்தது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



இந்த சம்பவம் தொடர்பாக கனடாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஒட்டாவா அருகே உள்ள ராக்லேண்டில் கத்தியால் குத்தப்பட்டு இந்தியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


துயரத்தில் இருக்கும் உறவினர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும். உயிரிழந்த இந்தியரின் குடும்பத்தினரோடு நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement