மின் நுகர்வோர் சிறப்பு முகாம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மின் பகிர்மான கோட்டங்களில் இன்று மின்நுகர்வோருக்கான சிறப்பு முகாம் காலை 11:00 முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது.

கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை ஆகிய கோட்டங்களில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகங்களில் முகாம்கள் நடக்க உள்ளன. இதில், மின் கட்டணத்தொகை, மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் தொடர்பான குறைபாடுகளுக்கு தீர்வு காணப்படும், என மேற்பார்வை பொறியாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Advertisement