மேலுார், கொட்டாம்பட்டியில் பங்குனி திருவிழாக்கள்

கொட்டாம்பட்டி: கச்சிராயம்பட்டி தேவியம்பு கருப்பு சுவாமி கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் 21 நாட்கள் விரதம் இருந்தனர். நேற்று காலை குஞ்சரங்குடி பகுதியில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து கோயில் வழியாக உடையாளி கைலாசபதி கோயிலுக்கு சென்றனர்.
அங்கு சுவாமிக்கு பாலாபிஷேகம் நடந்தது.
பிறகு பொங்கல் வைத்து கிடாவெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர்.சிலைகள் ஊர்வலம்: தும்பைபட்டி வீரகாளியம்மன் கோயில் திருவிழா ஏப்.,1ல் துவங்கியது.
நேற்று து. அம்பலகாரன்பட்டியில் இருந்து சுவாமி சிலைகள் மற்றும் பதுமைகளை பக்தர்கள் தும்பைபட்டி வீரகாளியம்மன் கோயிலுக்கு கொண்டு சென்றனர்.
பிறகு மாவிளக்கு ஏற்றியும், அங்க பிரதட்சனம் செய்தும், குழந்தை வரம் கிடைக்கப் பெற்றவர்கள் கரும்புத் தொட்டில் கட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். 35 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா : கிடாரிப்பட்டி காடு காவல் அம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்கள் கோயில் வீட்டிலிருந்து அய்யனார் கோயிலுக்கு சென்றனர். அங்கு பூஜாரி பொங்கல் வைத்து சுவாமி கும்பிட்டனர். அம்மன் கோயில் முன்பு 50க்கும் மேற்பட்ட ஆடுகள் வெட்டி நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 35 ஆண்டுகளுக்கு பிறகு இத்திருவிழா நடப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
தர்பூசணியா; பிலால் பிரியாணியா: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி திடீர் இடமாற்றத்திற்கு காரணம் என்ன?
-
கொழும்பு நகரில் பிரதமர் மோடிக்கு இலங்கை அதிபர் உற்சாக வரவேற்பு!
-
இன்று சவரனுக்கு ரூ.720 சரிந்த தங்கம்; 2 நாட்களில் ரூ.2,000 விலை குறைவால் பெண்கள் மகிழ்ச்சி
-
பயணிகள் வருகை, சரக்கு போக்குவரத்து; பெங்களூரு விமான நிலையம் சாதனை!
-
கனடாவில் இந்தியர் கத்தியால் குத்திக்கொலை
-
மாநிலத்தில் பரவலாக பெய்த கனமழை: கோடை வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி