ஆராய்ச்சி மையம் முன் தர்ணா

கொடைக்கானல்: மன்னவனுாரில் உள்ள மத்தியரசின் செம்மறி ஆடு, ரோம ஆராய்ச்சி மையத்தை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு கட்டணத்துடன் அனுமதியளிக்கப்படுகிறது.

துவக்கத்தில் இங்கு வரும் வாகனங்கள் மையத்தில் நிறுத்த அனுமதியளித்த நிலையில் தற்போது அனுமதி மறுக்கப்பட்டு ரோட்டில் நிறுத்தியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மலைக் கிராமத்தினர் பாதித்தனர்.

ரோட்டோர கடைகளால் பாதிப்பு உள்ளதாக ஆராய்ச்சி மையத்தினர் புகார் அளிக்கின்றனர். இவ்விருவரின் கருத்து வேறுபாட்டால் போக்குவரத்து பாதிக்கிறது. வழக்கம் போல் ஆட்டு பண்ணையில் வாகனங்களை பார்க்கிங் செய்து போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க கோரி ஆராய்ச்சி மைய நுழைவுவாயிலில் மக்கள் தர்ணா செய்தனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்தனர்.

Advertisement