மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக எம்.ஏ.பேபி தேர்வு

11

மதுரை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக எம்.ஏ.பேபி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக இருந்த சீதாராம் யெச்சூரி கடந்த ஆண்டு செப்., 12ல் உடல்நலக்குறைவால் காலமானார். இதற்கு சில நாட்களுக்கு பின்னர் நடந்த அக்கட்சியின் மத்திய குழு கூட்டத்தில், இந்தாண்டு மதுரையில் நடக்கும் அகில இந்திய மாநாட்டில் அடுத்த பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் வரை கட்சியின் அரசியல் குழு மற்றும் மத்திய குழுவின் இடைக்கால ஒருங்கிணைப்பாளராக பிரகாஷ் காரத் தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு மதுரையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் துவங்கியது. இக்கூட்டத்தில், பிரகாஷ் காரத், கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக மாநில செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இக்கூட்டத்தில், பொதுச் செயலாளராக.எம்.ஏ. பேபி, தேர்வு செய்யப்பட்டார். இது குறித்த அறிவிப்பை கேரள முதல்வர் பினராய் விஜயன், பிரகாஷ்காரத் ஆகியோர் அறிவித்தனர்.




யார் இவர்





எம்.ஏ. பே பி 1954 ம் ஆண்டு கொல்லத்தில் பிறந்தவர்.

இந்திய மாணவர் கூட்டமைப்பு மற்றும் இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு ஆகியவற்றின் அகில இந்தியத் தலைவராக பதவி வகித்து உள்ளார்.

மார்க்சிஸ்ட் மத்திய குழு உறுப்பினராக பணியாற்றினார்.

1986 முதல் 1998 ம் ஆண்டு வரை ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்துள்ளார்.


2006 முதல் 2016 வரை கொல்லத்தில் உள்ள குண்டாரா தொகுதி எம்.எல்.ஏ., ஆகவும், 2006 முதல் 2011 வரை மாநில பொதுக் கல்வி மற்றும் கலாசார அமைச்சராகவும் பதவி வகித்து உள்ளார்.


2012 முதல் பொலிட் பீரோ உறுப்பினராக உள்ளார்.

Advertisement