பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி 2 ரூபாய் உயர்வு; மக்களுக்கு பாதிப்பு இல்லை

20

புதுடில்லி: மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை 2 ரூபாய் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வால் மக்களுக்கு எதுவும் பாதிப்பில்லை.


பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.13 ஆகவும், டீசல் மீதான கலால் வரி ரூ.10 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விற்பனை விலையில் மாற்றம் இல்லை.இந்த சுமை வாடிக்கையாளர்களுக்கு மாற்றப்படவில்லை.

கூடுதல் வரி மூலம் அரசுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும்.

கடந்த 2022-ல் பெட்ரோல் ரூ.8, மற்றும் டீசல் ரூ.6 என கலால் வரி குறைக்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் (ஏப்.8) அமலாகும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Advertisement