சிறுமிக்கு பாலியல் தொல்லை இருவர் போக்சோவில் கைது

காரைக்கால் : காரைக்காலில் நீட்பயிற்சி வகுப்புக்கு சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இருவர் போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால் ,திருநள்ளாறு நெய்வாச்சேரி பகுதியை சேர்ந்தவர் 16வயது சிறுமி. இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் காரைக்காலில் உள்ள நீட் தேர்வு பயிற்சிக்கு சென்று ,பஸ் மூலம் நெய்வாச்சேரி வந்து , வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த இரு வாலிபர்கள் சிறுமியை பின் தொடர்ந்த சென்று பாலியல் தொல்லை கொடுத்தனர்.

இது குறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் திருநள்ளாறு சப் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குந் பதிந்து விசாரணை செய்தனர்.

இதில் அவர்கள் நெய்வாச்சேரி பகுதியை சேர்ந்த நந்தா (எ)நத்தகுமார, 23; இவர் மீது கஞ்சா,பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு வழக்கு உள்ளது. அவரது நண்பர் நெடுங்காடு ராஜா தெருவை சேர்ந்த சவுந்தராஜ், 25; ஆகியோர் எனத் தெரியவந்தது. இவர்கள் இருவர் மீது போக்சோ சட்டத்தின் வழக்கு பதிவு செய்து சவுந்தராஜை கைது செய்தனர்.

நேற்று முன்தினம் சென்னையில் தலைமைறைவாக இருந்த நந்தாவை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர்.

Advertisement