'ஊர்வலத்தில் பட்டாசு வெடித்தால் நடவடிக்கை'; குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
உசிலம்பட்டி, : 'நகராட்சி பகுதியில் ஊர்வலம் செல்லும்போது பட்டாசு வெடிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உசிலம்பட்டி குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
உசிலம்பட்டி தாலுகா விவசாயிகள் குறைதீர் கூட்டம் தாசில்தார் பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. கூட்டம் துவங்கியதும், கல்வித்துறை, நகராட்சி, தேசிய நெடுஞ்சாலை, பாங்க் அலுவலர்கள் தொடர்ந்து கூட்டத்தைப் புறக்கணிக்கின்றனர். அவர்கள் கூட்டத்திற்கு வர தாசில்தார் உத்தரவிட வேண்டும்.
சந்தை திடலுக்குள் செல்லும் வழியில் ஆக்கிரமிப்புகள், கழிவுநீர் கால்வாய்கள் துார் வாரப்படாமல், ரோடு செப்பனிடப்படாமல் உள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. பலமுறை புகார் தெரிவித்தும் எந்த பணிகளும் நடக்கவில்லை.
சந்தை யாருக்கு என்பதில் நகராட்சி, ஒன்றியத்திற்கு இடையே தீர்வு காணப்படாமல் வழக்கு கோர்ட்டில் உள்ளதால் பணிகள் நடக்கவில்லை என பதில் கொடுக்கப்படுகிறது.
வழக்கு இருந்தால் சுகாதாரப்பணிகளை நடத்தக்கூடாது என எதுவும் உள்ளதா என கேள்வி எழுப்பினர். 'ஒன்றிய, நகராட்சி கமிஷனர்களிடம் பேசி தீர்வு காணப்படும்' என தாசில்தார் தெரிவித்தார்.
நல்லொச்சான்பட்டி பகுதியில் 58 கிராம கால்வாயை ஆக்கிரமித்து கம்பிவேலி போட்டுள்ளனர். இதனை அப்புறப்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பலருக்கு உதவித்தொகை வழங்க உத்தரவிட்டு பல மாதங்களாகியும் கிடைக்கவில்லை.
நகராட்சி பகுதியில் நடைபெறும் ஊர்வலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் போலீசார் முன்பே பட்டாசு வெடிக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் பேசினர்.
மேலும்
-
டில்லி சென்றார் கவர்னர் ரவி
-
மீனவர் பிரச்னைக்கு தீர்வு தொடர்பாக பிரதமர் மோடியுடன் பேச்சு: இலங்கை அதிபர்
-
இரட்டை இலை சின்னம் விவகாரம்: ஏப்.,28 ல் தேர்தல் கமிஷன் விசாரணை
-
ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவா: துணை ஜனாதிபதி எதிர்ப்பு
-
விசைத்தறியாளர்களுக்கு கூலி உயர்வு: உறுதி செய்ய தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
-
ஆபாச பேச்சு அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு