விவசாய சங்க தலைவர் உட்பட மூவர் உ.பி.,யில் சுட்டுக்கொலை
பதேபூர் : உத்தர பிரதேசத்தில் உள்ள பதேபூர் மாவட்டத்தின் அக்ரி கிராமத்தை சேர்ந்தவர் பப்பு சிங், 50, பாரதிய கிசான் என்னும் விவசாயிகள் சங்க மாவட்ட தலைவராக இருந்தார்.
வாக்குவாதம்
இவர் நேற்று காலை தன் டிராக்டரை வீட்டின் முன் உள்ள சாலையில் நிறுத்தினார். அப்போது அந்த வழியே பைக்கில் வந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சுரேஷ் குமார், டிராக்டரை ஓரமாக நிறுத்தும்படி கூறினார்.
அதை ஏற்க மறுத்த பப்பு சிங்கின் தம்பி பிங்கு மற்றும் பப்பு சிங்கின் மகன் அபய் ஆகியோர் சுரேஷ் குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அந்நேரம் சுரேஷ் குமாருக்கு ஆதரவாக அவரது மகன்களும், நண்பர்களும் சேர்ந்து பப்புவிடம் மோதலில் ஈடுபட்டனர்.
திடீரென சுரேஷ் குமார் மகன், தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டதில் பப்பு சிங், அபய் சிங், பிங்கு சிங் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
முன்பகை
அங்கு பதற்றம் நிலவியதால் போலீசார் குவிக்கப்பட்டு மோதலை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சுரேஷ் குமார் மற்றும் அவரது மகன்களை போலீசார் கைது செய்தனர். போலீசார் கூறுகையில், 'பப்புவின் தாயாருக்கும், சுரேஷ் குமாருக்கும் ஏற்பட்ட அரசியல் முன்பகை காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம்' என்றனர்.
மேலும்
-
டில்லி சென்றார் கவர்னர் ரவி
-
மீனவர் பிரச்னைக்கு தீர்வு தொடர்பாக பிரதமர் மோடியுடன் பேச்சு: இலங்கை அதிபர்
-
இரட்டை இலை சின்னம் விவகாரம்: ஏப்.,28 ல் தேர்தல் கமிஷன் விசாரணை
-
ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவா: துணை ஜனாதிபதி எதிர்ப்பு
-
விசைத்தறியாளர்களுக்கு கூலி உயர்வு: உறுதி செய்ய தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
-
ஆபாச பேச்சு அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு