ஆந்திர அரசுக்கு ஆலோசனை வழங்கும் சென்னை ஐ.ஐ.டி.,

ஹைதராபாத் : ஆந்திர மாநில மக்களுக்கு இன்னும் என்னென்ன சிறப்பானவற்றை வழங்கலாம் என்பது குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்க, 10 பேர் அடங்கிய குழுவை அமைக்க முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

அதில், கேட்ஸ் பவுண்டேஷன், சென்னை ஐ.ஐ.டி., மற்றும் சில உயரிய கல்வி அமைப்புகளில் இருந்து உறுப்பினர்களை நியமிக்க, ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.

தற்போது, 254 சேவைகளை வாட்ஸாப் வாயிலாக ஆந்திர மக்கள் பெற முடியும். இதை, 1,000 சேவைகளாக அதிகரிக்க, முதல்வர் சந்திரபாபு நாயுடு இலக்கு நிர்ணயித்துள்ளார்.

Advertisement