போதை டிரைவர் ஓட்டிய கார் மோதி மூன்று பேர் பலி

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று முன்தினம் இரவு உஸ்மான் என்பவர், மது போதையில் காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றார்.

இதில் சாலையில் நடந்து சென்றவர்கள் மீதும், எதிரே வந்த வாகனங்கள் மீதும் அவரது கார் அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்தை ஏற்படுத்தியது.

இந்த விபத்தில் பாதசாரிகள் மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர்; காயம் அடைந்த, 3 வயது சிறுமி உள்ளிட்ட ஆறு பேர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஉள்ளனர்.

அப்பகுதி இளைஞர்கள், உஸ்மானை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், தனியார் நிறுவனத்தில் மருத்துவ உபகரணங்களை விற்பனை செய்யும் பிரதிநிதியாக, உஸ்மான் பணியாற்றி வருவது தெரிந்தது.

அவரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement