சிறுவன் ஓட்டிய பைக் மோதி கூலி தொழிலாளி படுகாயம் பைக் கொடுத்த தந்தை கைது
புதுச்சேரி : புதுச்சேரியில் சிறுவர் ஓட்டிச் சென்ற பைக் மோதி தொழிலாளி படுகாயமடைந்த வழக்கில், சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டார்.
புதுச்சேரி, பெரியகாலாப்பட்டை சேர்ந்தவர் சபாபதி; கூலி தொழிலாளி. இவர் கடந்த 5ம் தேதி இரவு பைக்கில், பெரியகாலாப்பட்டு, முருகன் கோவில் வீதியில் சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது, எதிரே வேகமாக வந்த யமாகா எப் இசட் பைக், சபாபதி பைக் மீது மோதியது.அதில் படுகாயமடைந்த சபாபதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து அவரது மனைவி ஆனந்தி அளித்த புகாரின் பேரில், புதுச்சேரி போக்குவரத்து (வடக்கு_ பிரிவு) போலீசார் விசாரித்தனர். அதில், விபத்தை ஏற்படுத்திய யமாகா எப் இசட் பைக் ஓட்டி வந்தவர் 17 வயது சிறுவன் என்பதும், அந்த பைக்கிற்கு இன்சூரன்ஸ் இல்லாததும், பைக்கை சிறுவனுக்கு அவரது தந்தை கொடுத்து அனுப்பியது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து போலீசார், மோட்டார் வாகனச் சட்டம் 199(எ) பிரிவில் வழக்கு பதிந்து சிறுவனின் தந்தை விஜயகாந்தை,42; கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
விபத்து ஏற்படுத்திய சிறுவனை சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
மேலும், சிறுவனுக்கு 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் வழங்கக்கூடாது எனவும், விபத்து ஏற்படுத்திய பைக்கின் பதிவுச் சான்றை ஓராண்டிற்கு இடைநீக்கம் செய்திட புதுச்சேரி வட்டார போக்குவரத்து அதிகாரிக்கு பரிந்துரை செய்தனர்.
மேலும்
-
டில்லி சென்றார் கவர்னர் ரவி
-
மீனவர் பிரச்னைக்கு தீர்வு தொடர்பாக பிரதமர் மோடியுடன் பேச்சு: இலங்கை அதிபர்
-
இரட்டை இலை சின்னம் விவகாரம்: ஏப்.,28 ல் தேர்தல் கமிஷன் விசாரணை
-
ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவா: துணை ஜனாதிபதி எதிர்ப்பு
-
விசைத்தறியாளர்களுக்கு கூலி உயர்வு: உறுதி செய்ய தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
-
ஆபாச பேச்சு அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு