மேலாண்மை திறன் போட்டி

ராமநாதபுரம் : ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் மேலாண்மை திறன் சார்ந்த போட்டிகள் நடந்தது. இதில் 10க்கு மேற்பட்ட கலை அறிவியல் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.

தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா தலைமை வகித்தார். முதல்வர் பெரியசாமி முன்னிலை வகித்தார்.மேலாண்மைத் துறைத் தலைவர் மெய்கண்ட கணேஷ்குமார் வரவேற்றார். செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் பாலகிருஷ்ணன் போட்டிகளை துவக்கி வைத்தார்.

மாணவர்களுக்கு மேலாண்மை திறன் சார்ந்த பல்வேறு போட்டிகள் நடந்தது.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டது. பேராசிரியர்கள் ராமலட்சுமி, ஜெயபாலன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement