சர்வேயர்களை நிரப்ப வலியுறுத்தல்

மதுரை : மதுரையில் தமிழ்நாடு நில அளவைத் துறை அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் மகேந்திரகுமார் தலைமையில் நடந்தது.

பொதுச் செயலாளர் பிரபு, பொருளாளர் கார்த்திகேயன், பிரசார செயலாளர் ராஜேஷ், அமைப்புச் செயலாளர் ஜெயராமன், மாநில செயலாளர்கள் மகராசி, மாரிச்செல்வம், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் மார்நாடு உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தமிழகத்தில் 542 குறுவட்ட அளவர்கள் (பிர்கா சர்வேயர்) பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய குறுவட்டங்களில் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், மேல்முறையீடு உயர் அதிகாரிகளை விரைவில் சந்திக்க வேண்டும், பதவி உயர்வுக்காக காத்துக் கொண்டிருக்கும் நிலஅளவர்கள் திரண்டு வரவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement