தொழில்முனைவோரை உருவாக்கியுள்ளது முத்ரா திட்டம்: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடில்லி: “சொந்த காலில் நிற்க வேண்டும் என்ற தாகத்தை தணிப்பதுடன், நம் இளைஞர்களின் தொழில் திறன்களை, முத்ரா திட்டம் வெளிப்படுத்தியுள்ளது,” என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
'நிதியற்றவர்களுக்கு நிதியளிப்பது' என்ற நோக்கத்துடன் குறு, சிறு நிறுவனங்களை முறையான நிதி அமைப்புகுள் கொண்டு வந்து அவர் களுக்கு மலிவான கடன்களை வழங்கும் முத்ரா திட்டம், 2015 ஏப்., 8ல் துவக்கி வைக்கப்பட்டது.
ஊக்கம்
பொதுத்துறை, கூட்டுறவு, தனியார் என, அனைத்து வங்கிகள் வாயிலாக தொழில்களை நடத்துவதற்கும், விரிவுபடுத்துவதற்கும், 20 லட்சம் ரூபாய் வரை இந்த திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படுகிறது.
இதன் 10வது ஆண்டை யொட்டி, திட்டத்தின் பயனாளிகள் சிலருடன், பிரதமர் நரேந்திர மோடி, டில்லியில் உள்ள தன் இல்லத்தில் நேற்று கலந்துரையாடினார்.
அப்போது அவர் கூறியதாவது: முத்ரா திட்டத்தின் கீழ், இதுவரை 33 லட்சம் கோடி ரூபாய் பிணையில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற கோடிக்கணக்கான இளைஞர்களின் தாகம் தணிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுடைய தொழில்முனைவோர் திறன்களை வெளிப்படுத்தியுள்ளது.
வேலை தேடுபவர்களாக அல்லாமல், வேலை கொடுப்பவர்களாக திகழும் ஊக்கத்தை இளைஞர்களிடையே இந்த திட்டம் ஊட்டியுள்ளது.
நடவடிக்கை
இதுவரை கடன் பெற்றவர்களில் பாதி பேர், எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள்.
மேலும், 70 சதவீதம் பேர் பெண்கள் என்பதை அறியும்போது, மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. ஒவ்வொரு முத்ரா கடனும், சுயமரியாதை, கவுரவம், வாய்ப்பு களை கொண்டுள்ளது.
மேலும், சமூகப் பங்களிப்பு மற்றும் பொருளாதார சுதந்திரத்தையும் அளிக்கிறது. இந்த கடன் திட்டம் தொடர்பாக ஆய்வு செய்து, அதை மேலும் வலுப்படுத்தவும், மேம்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் எடுக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும்
-
டில்லி சென்றார் கவர்னர் ரவி
-
மீனவர் பிரச்னைக்கு தீர்வு தொடர்பாக பிரதமர் மோடியுடன் பேச்சு: இலங்கை அதிபர்
-
இரட்டை இலை சின்னம் விவகாரம்: ஏப்.,28 ல் தேர்தல் கமிஷன் விசாரணை
-
ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவா: துணை ஜனாதிபதி எதிர்ப்பு
-
விசைத்தறியாளர்களுக்கு கூலி உயர்வு: உறுதி செய்ய தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
-
ஆபாச பேச்சு அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு