மும்பை அணி 'திரில்' வெற்றி: டில்லி அணிக்கு முதல் தோல்வி

டில்லி: கடைசி நேரத்தில் 'பீல்டிங்'கில் கலக்கிய மும்பை அணி 12 ரன் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது. டில்லி அணி முதல் தோல்வியை பதிவு செய்தது.
டில்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் டில்லி, மும்பை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற டில்லி அணி கேப்டன் அக்சர் படேல், 'பவுலிங்' தேர்வு செய்தார்.
திலக் அபாரம்: மும்பை அணிக்கு ரோகித் சர்மா (18) சுமாரான துவக்கம் கொடுத்தார். ஸ்டார்க் ஓவரில் 2 பவுண்டரி விரட்டிய ரிக்கிள்டன், முகேஷ் குமார் பந்தை சிக்சருக்கு அனுப்பினார். குல்தீப் யாதவ் 'சுழலில்' ரிக்கிள்டன் (41) போல்டானார். குல்தீப் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய திலக் வர்மா, அக்சர் படேல், மோகித் சர்மா பந்தில் தலா ஒரு சிக்சர் விளாசினார். குல்தீப், அக்சர், மோகித் பந்தில் தலா ஒரு பவுண்டரி விரட்டிய சூர்யகுமார் யாதவ், விப்ராஜ் நிகம் வீசிய 13வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 60 ரன் சேர்த்த போது குல்தீப் பந்தில் சூர்யகுமார் (40) ஆட்டமிழந்தார். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (2) ஏமாற்றினார். பொறுப்பாக ஆடிய திலக், 26 பந்தில் அரைசதம் எட்டினார். ஸ்டார்க் வீசிய 18வது ஓவரில் 2 பவுண்டரி அடித்த நமன் திர், மோகித் பந்தில் சிக்சர் விளாசினார். திலக், 59 ரன்னில் அவுட்டானர்.மும்பை அணி 20 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 205 ரன் எடுத்தது. நமன் திர் (38), வில் ஜாக்ஸ் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
கருண் கலக்கல்: சவாலான இலக்கை விரட்டிய டில்லி அணிக்கு பிரேசர்-மெக்குர்க் (0) ஏமாற்றினார். பின் இணைந்த அபிஷேக் போரெல், கருண் நாயர் ஜோடி நம்பிக்கை தந்தது. பும்ரா வீசிய 6வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த கருண், 22 பந்தில் அரைசதம் எட்டினார். தொடர்ந்து அசத்திய கருண், ஹர்திக் பாண்ட்யா, கரண் சர்மா பந்துகளை சிக்சர், பவுண்டரிக்கு அனுப்பினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 119 ரன் சேர்த்த போது கரண் சர்மா பந்தில் அபிஷேக் (33) அவுட்டானார். அபாரமாக ஆடிய கருண் (89 ரன், 5 சிக்சர், 12 பவுண்டரி), சான்ட்னர் 'சுழலில்' சிக்கினார்.
ராகுல் (15), கேப்டன் அக்சர் படேல் (9), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (1) சோபிக்கவில்லை. சான்ட்னர் பந்தில் விப்ராஜ் நிகம் (14) 'பெவிலியன்' திரும்பினார். பும்ரா வீசிய 19வது ஓவரில் அஷுதோஷ் சர்மா (17), குல்தீப் யாதவ் (0), மோகித் சர்மா (0) வரிசையாக 'ரன்-அவுட்' ஆகினர். டில்லி அணி 19 ஓவரில் 193 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது. ஸ்டார்க் (1) அவுட்டாகாமல் இருந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மே 2ல் அ.தி.மு.க., செயற்குழுக் கூட்டம்
-
மாணவர், ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவன்: நெல்லை பள்ளியில் அதிர்ச்சி
-
மத்திய -மாநில அரசு உறவு பற்றி ஆராய உயர்நிலைக் குழு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
-
பயம், அச்சம்... இல்லாமல் இருப்பதற்கு என்ன வழி?
-
நாங்க மாற முடியாது என எதிர்த்த ஹார்வர்ட் பல்கலை; நிதியை நிறுத்தி டிரம்ப் 'தடாலடி'
-
சத்குருவின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து!
Advertisement
Advertisement