நாங்க மாற முடியாது என எதிர்த்த ஹார்வர்ட் பல்கலை; நிதியை நிறுத்தி டிரம்ப் 'தடாலடி'

வாஷிங்டன்: உலகப் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கான 2.2 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பு படி 18,858 கோடி ரூபாய்) மானியங்களை டிரம்ப் நிர்வாகம் அதிரடியாக நிறுத்தி உள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற முதல்நாளில் இருந்து பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் உலக புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கான மானியங்களை நிறுத்தி அதிபர் டிரம்ப் அதிரடி காட்டினார்.
காரணம் என்ன?
பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் செயல்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில், டிரம்ப் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில், ''பல்கலைக் கழகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும். மாணவர்கள் அட்மிஷன் தகுதி அடிப்படையில் மட்டுமே நடக்க வேண்டும்.
பணியமர்த்தல் கொள்கைகளில் மாற்றம், பல்கலைக்கழகத்தின் பன்முகத்தன்மை கொள்கையில் ஆய்வு எனப் பல மாற்றங்களை செய்ய வேண்டும். பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களைத் தடுக்கும் வகையில் மாஸ்க் அணியத் தடை விதிக்க வேண்டும்.
குற்றச் செயல்கள், வன்முறை அல்லது துன்புறுத்தல்களை ஆதரிக்கும் அல்லது ஊக்குவிக்கும் எந்தவொரு மாணவர் குழு அல்லது கிளப்பை அங்கீகரிக்க அல்லது நிதி அளிக்கக்கூடாது.'' என டிரம்ப் நிர்வாகம் வலியுறுத்தி இருந்தது. இதனை ஹார்வர்ட் பல்கலை நிர்வாகம் ஏற்க மறுத்துவிட்டது. இது குறித்து ஹார்வர்ட் பல்கலை தலைவர் ஆலன் கார்பர் டிரம்பிற்கு பதில் கடிதம் எழுதினார்.
அந்த கடிதத்தில், ''பேச்சு சுதந்திர உரிமைகளை மீறுவதாகவும், இனம், நிறம் அல்லது தேசிய வம்சாவளியின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவது போல இருக்கிறது. யாரைச் சேர்க்கலாம். எந்தெந்த படிப்பு மற்றும் துறைகளைத் தொடரலாம் என்பதை எந்த அரசும் சொல்லக்கூடாது.
யூத எதிர்ப்புக் கொள்கையைக் கையாள பல்கலைக்கழகம் தேவையான சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது" என்று ஆலன் கார்பர் தெரிவித்து இருந்தார்.
இதனால் ஹார்வர்ட் பல்கலைக்கான 2.2 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பு படி 18,858 கோடி ரூபாய்) மானியங்களையும், 60 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பு படி 514 கோடி ரூபாய்) ஒப்பந்தங்களையும் டிரம்ப் நிர்வாகம் அதிரடியாக நிறுத்தி உள்ளது.
இது குறித்து அமெரிக்க நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சிவில் உரிமைகள் சட்டங்களை நிலைநிறுத்தும் பொறுப்பைக் கடைப்பிடிக்காத பல்கலைக்கழகங்களுக்கு அரசு நிதி கிடைக்காது.
பல்கலைக்கழகங்களில் கற்றல் சீர்குலைவு நடந்து வருகிறது. யூத மாணவர்கள் மீதான துன்புறுத்தல் அதிகரித்து வருவதை ஏற்க முடியாது'' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உலகப் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கான நிதியை நிறுத்தியது அமெரிக்க வட்டாரங்களில் புயலை கிளப்பி உள்ளது.











மேலும்
-
சிறைச்சாலை முன் கார்களுக்கு தீ வைப்பு: பிரான்சில் மர்ம நபர்கள் தாக்குதல்
-
முதல்வரின் பதிலை கேட்கும் மக்களின் காதுகள் பாவமில்லையா: இ.பி.எஸ்., விமர்சனம்
-
கூட்டு பாலியல் வன்கொடுமை; உ.பி., மாநிலத்தில் 14 பேர் கைது
-
காஷ்மீர் சிறப்பு சட்டத்தை நீக்க பரூக் அப்துல்லா ஆதரவா; உளவுத்துறை முன்னாள் தலைவர் பரபரப்பு தகவல்
-
நாங்குநேரி மாணவன் சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல்; மருத்துவமனையில் பதற்றம்
-
தி.மு.க., ஆட்சியை அகற்றுவது ஒன்றே தீர்வு; சீமான் ஆவேசம்