டிராக்டர் மீது லாரி மோதி டிரைவர் பலி; 18 பேர் காயம்

மயிலம் : விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே வி.சாலை கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர், 45.

இவர், நேற்று முன்தினம், மயிலம் முருகன் கோவில் முத்துப்பல்லக்கு திருவிழாவுக்கு, தன் உறவினர்களுடன் டிராக்டரில் சென்றார்.

சுவாமி தரிசனம் முடிந்து நேற்று காலை சொந்த ஊருக்கு புறப்பட்டனர். அதிகாலை, 4:15 மணிக்கு, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மயிலம் அருகே வந்த போது, வேகமாக வந்த லாரி, டிராக்டரின் பின்பக்கம் மோதியது.

இந்த விபத்தில், பலத்த காயமடைந்த பாஸ்கர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். டிராக்டரில் பயணம் செய்த நாகமுத்து, 44, புகழ்செல்வி, 36, உட்பட 18 பேர் காயமடைந்தனர்.

அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். மயிலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement