'முதல்வர் சம்பந்திக்கு ராஜமரியாதை!'

நடிகர் விக்ரம் நடித்துள்ள வீரதீர சூரன் படம், கரூர் தின்னப்பா தியேட்டரில் வெளியானது. படத்தின் இடைவேளையின் போது, ரசிகர்களை சந்திக்க நடிகர் விக்ரம், காரில் கரூர் வந்தார். தியேட்டர் உள்ளே சென்று ரசிகர்களை சந்திக்காமல், வெளியில் இருந்த கட்டடத்தில் ஏறி நின்று சிறிது நேரம் பேசினார். அவரது காரை ரசிகர்கள் சூழ்ந்து நின்றனர்.
இதனால், காரில் ஏறுவது சிரமம் என கருதிய விக்ரம், அந்த கட்டடத்தின் மாடியிலேயே நின்று கொண்டிருந்தார். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகமாவதைக் கண்ட போலீசார், போலீஸ் ஜீப்பை வரவழைத்து விக்ரமை பத்திரமாக அதில் ஏற்றி, சிறிது துாரத்தில் இருந்த, கோவை செல்லும் சாலையில் இறக்கி விட்டனர். பின், விக்ரம் அவரது காரில் ஏறி, கோவைக்கு சென்றார்.
இதை பார்த்த ஒருவர், 'முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துக்கு நடிகர் விக்ரம் சம்பந்தி முறை. அதான், போலீசார் இப்படி ராஜமரியாதை தர்றாங்க...' என, முணுமுணுத்தபடியே கிளம்பினார்.

மேலும்
-
மே 2ல் அ.தி.மு.க., செயற்குழுக் கூட்டம்
-
மாணவர், ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவன்: நெல்லை பள்ளியில் அதிர்ச்சி
-
மத்திய -மாநில அரசு உறவு பற்றி ஆராய உயர்நிலைக் குழு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
-
பயம், அச்சம்... இல்லாமல் இருப்பதற்கு என்ன வழி?
-
நாங்க மாற முடியாது என எதிர்த்த ஹார்வர்ட் பல்கலை; நிதியை நிறுத்தி டிரம்ப் 'தடாலடி'
-
சத்குருவின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து!