கேரளா வக்கீலுக்கு புகழாரம்

பிரிட்டிஷ் ஆட்சியின்போது, பஞ்சாபின் அமிர்தசரஸில் உள்ள ஜாலியன் வாலாபாகில் அமைதியான போராட்டம் நடந்தபோது, நுாற்றுக்கணக்கானோர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை பிரதமர் மோடி நேற்று சுட்டிக்காட்டி பேசினார்.

அவர் கூறுகையில், ''ஜாலியன் வாலாபாக் படுகொலையின்போது, கேரளாவைச் சேர்ந்த பிரபல வக்கீல் சங்கரன் நாயர், பிரிட்டிஷ் அரசில் மிக உயர்ந்த பதவியில் இருந்தார்.

''உடனே, தன் பதவியை ராஜினாமா செய்ததோடு, வழக்கு தொடர்ந்து, பிரிட்டிஷ் அரசின் அடித்தளத்தையே அசைத்தார். அவரை பஞ்சாப், ஹரியானா, ஹிமாச்சல் மாநிலங்களின் மக்கள் மறக்கக் கூடாது. கேரளாவைச் சேர்ந்த அவர், பஞ்சாப் மக்களுக்காக போராடினார்,” என்றார்.

Advertisement