முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் முக்கிய ஆலோசனை

9


புதுடில்லி: காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சூழ்நிலையில், முப்படை தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் உடன் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை நடத்தினார்.


இந்தக் கூட்டத்தில் காஷ்மீரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள, பாதுகாப்பு அமைச்சரவைக்கான குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து அங்கு நிலவும் சூழ்நிலை குறித்து ராஜ்நாத் சிங்கிடம் ராணுவ தளபதி உபேந்திர திவேதி, கடற்படை தளபதி தினேஷ் திரிபாதி ஆகியோர் எடுத்துக் கூறினர். மேலும், விமானப்படை தளபதி ஏ.பி. சிங்கும் விளக்கம் அளித்தார்.

Advertisement