விழுப்புரத்தில் சமத்துவ நாள் விழா ரூ. 71.65 கோடி நலத்திட்ட உதவி

விழுப்புரம்: விழுப்புரத்தில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி நடந்த சமத்துவ நாள் விழாவில் ஆதிதிராவிடர், பழங்குடியினர்களுக்கு ரூ. 71.65 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சட்டக்கல்லுாரியில் நடந்த விழாவிற்கு கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் மஸ்தான், லட்சுமணன், அன்னியூர் சிவா முன்னிலை வகித்தனர்.வனத்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்று, ஆதிதிராவிடர், பழங்குடியினர்களுக்கு, ரூ.71.65 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 1,291 பேருக்கு, ரூ.45.87 கோடி மதிப்பில் கலைஞர் கனவு இல்ல வீடுகளுக்கான ஆணை, 321 பேருக்கு ரூ.16.27 கோடி மதிப்பில் பிரதமர் வீடு கட்டும் திட்ட வீடுகள், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 10 பேருக்கு ரூ.72,800 மதிப்பில் சலவைப்பெட்டி, தாட்கோ சார்பில் 5 பேருக்கு ரூ.37.49 லட்சம் மதிப்பில் புதிய தொழில் துவங்க ஆணை, 323 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, 5 பேருக்கு ரூ.4.62 லட்சம் மதிப்பில் தேசிய தோட்டக்கலை இயக்க நலத்திட்டம், முன்னோடி வங்கி சார்பில் 19 பேருக்கு கறவை மாடு கடன், 9 பேருக்கு கல்வி கடன் உதவி, மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் 16 பேருக்கு ஸ்கூட்டர்கள் என, மொத்தம் 3,230 பேருக்கு ரூ.71.65 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
விழாவில் டி.ஆர்.ஓ., ஹரிதாஸ், கூடுதல் கலெக்டர் பத்மஜா, சேர்மன் தமிழ்ச்செல்வி பிரபு, செயற்பொறியாளர் ராஜா, ஆதிதிராவிடர் நல அலுவலர் வளர்மதி, தாட்கோ மேலாளர் ரமேஷ்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மேலும்
-
பாகிஸ்தான் துாதரகத்துக்குள் கொண்டு செல்லப்பட்ட கேக்; உச்ச கட்ட கோபத்தில் இந்தியா!
-
கருணாநிதி பெயரில் புதிய பல்கலை; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
-
டில்லியில் பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பு வாபஸ்; அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கை
-
பாக்., அரசின் எக்ஸ் தளப்பக்கம் இந்தியாவில் முடக்கம்
-
பயங்கரவாதிகளை ஆதரிக்கும் படுபாதக பாகிஸ்தான் மீது என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம்?: இங்கு எழுதுங்கள் வாசகர்களே...
-
காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை; ராணுவ வீரர் வீரமரணம்