பாகிஸ்தான் துாதரகத்துக்குள் கொண்டு செல்லப்பட்ட கேக்; உச்ச கட்ட கோபத்தில் இந்தியா!

36


புதுடில்லி: காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில், பாகிஸ்தான் துாதரகம் இன்று கேக் ஆர்டர் செய்து வரவழைத்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதுமே காஷ்மீர் தாக்குதலால் உச்சக்கட்ட கோபத்தில் இருக்கும் நிலையில், டில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்குள் ஒரு நபர் கேக்கை கொண்டு சென்றார்.
அப்போது அந்த நபரை சுற்றி வளைத்து நிருபர்கள் கேக் எதற்கு, யார் ஆர்டர் செய்தனர், கொண்டாட்டம் நடக்கப் போகிறதா என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர். அந்த பாகிஸ்தான் தூதரக ஊழியர் மவுனமாக செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.



சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டதால் நாடு முழுவதும் அதிர்ச்சியும், வேதனையும் நிலவி வருகிறது. ‛‛இந்த கொடுஞ்செயலுக்கு பாகிஸ்தான் தான் காரணம்'' என்று இந்தியா குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. ஆனாலும் நாங்கள் ஏதும் செய்யவில்லை என பாகிஸ்தான் அலறி கொண்டு இருக்கிறது. இத்தகைய சூழலில், பாகிஸ்தான் துாதரகத்துக்கு கேக் ஆர்டர் செய்து வரவழைத்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement