டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் பேட்டரி திருடிய 2 பேர் கைது

புதுச்சேரி : மேட்டுப்பாளையம் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் குடோனில் 4 இன்வெட்டர் பேட்டரிகள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், நல்லாத்துார், முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமரகுரு, 36; மேட்டுப்பாளையத்தில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் குடோன் மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 12ம் தேதி இரவு 10:00 மணிக்கு வழக்கம் போல், குடோன் மற்றும் காம்பவுண்ட் கேட்டை பூட்டி சென்றார். கடந்த 13, 14ம் தேதி விடுமுறை என்பதால், நேற்று காலை 9:30 மணிக்கு குடோனை திறந்தபோது, குடோனின் முதல் மாடியில் பொறுத்தப்பட்டிருந்த 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 4 இன்வெட்டர் பேட்டரிகள் மர்ம நபர்களால் திருடப்பட்டது.
புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, விசாரித்தனர். பேட்டரிகளை திருடியது மேட்டுப்பாளையம் கார்த்திக், 36; சண்முகப்புரம் முருகன், 45, என தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 4 இன்வெட்டர் பேட்டரிகளை பறிமுதல் செய்தனர். இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.
மேலும்
-
ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவா: துணை ஜனாதிபதி எதிர்ப்பு
-
விசைத்தறியாளர்களுக்கு கூலி உயர்வு: உறுதி செய்ய தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
-
ஆபாச பேச்சு அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதா: உயர்நீதிமன்றம் கேள்வி
-
நக்சலிசத்தை ஒழிக்க பாதுகாப்பு படை முக்கிய பங்கு வகிக்கும்: அமித்ஷா நம்பிக்கை
-
இளம் தலைவர்கள் பட்டியலில் மத்திய அமைச்சர் ராம் மோகன்; இவர் யார் தெரியுமா?
-
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழை தொடரும்: வானிலை மையம் தகவல்