நக்சலிசத்தை ஒழிக்க பாதுகாப்பு படை முக்கிய பங்கு வகிக்கும்: அமித்ஷா நம்பிக்கை

2


போபால்: ''2026ம் ஆண்டிற்குள் நக்சலித்தை ஒழிப்பதில் மத்திய ஆயுதப்படைகள் முக்கிய பங்கு வகிக்கும்'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.


மத்திய பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தில் நடந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 86வது தின விழாவில் அமித்ஷா பேசியதாவது: மத்திய பாதுகாப்பு படையின் நடவடிக்கையால், நக்சல் தாக்குதல் 70 சதவீதம் குறைந்துள்ளது. பாதுகாப்பு படையினரின் துணிச்சல் மற்றும் அர்பணிப்புக்காக இந்தியா பெருமை கொள்கிறது.


பாதுகாப்புப் படைகளின் அர்ப்பணிப்பு வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். நாட்டிலேயே மட்டுமல்ல, உலகிலேயே மிகப்பெரிய துணை ராணுவப் படை என்ற பெருமையை மத்திய ரிசர்வ் போலீஸ் படை பெற்றுள்ளது.


அவர்கள் பல சந்தர்ப்பங்களில், நாட்டின் கவுரவத்தை பாதுகாத்துள்ளனர். மார்ச் 31ம் தேதிக்குள் நாட்டை நக்சல் இல்லாத நாடாக மாற்றுவோம். நக்சலித்தை ஒழிப்பதில் மத்திய ஆயுதப்படைகள் முக்கிய பங்கு வகிக்கும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Advertisement