காயமடைந்த மயில் மீட்பு  

பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே நாய் துரத்தி கடித்ததில் காயமடைந்த ஆண் மயிலை அப்பகுதி மக்கள் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

பெண்ணாடம் அடுத்த செம்பேரி பகுதியில் ஏராள மான மயில்கள் உள்ளன. நேற்று காலை 11:00 மணிக்கு அதே பகுதியில் உள்ள விளை நிலங்களில் இருந்த ஆண் மயிலை நாய்கள் துரத்தி கடித்தன.

இதையறிந்த அப்பகுதி மக்கள் காயத்துடன், பறக்க முடியாத நிலையில் இருந்த ஆண் மயிலை மீட்டு, விருத்தாசலம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

மயிலுக்கு சிகிச்சையளித்து, காப்புக் காட்டில் விடுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement