லத்துார் பி.டி.ஓ., ஆபீசுக்கு இரவு நேர காவலர் நியமனம்
பவுஞ்சூர்:நம் நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியாக, லத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நிரப்பப்படாமல் இருந்த, இரவு நேர காவலர் பணியிடம் நிரப்பப்பட்டு உள்ளது.
பவுஞ்சூர் பஜார் பகுதியில், லத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகம் செயல்படுகிறது. இது, லத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட 41 ஊராட்சிகளுக்கு, தலைமையிடமாக உள்ளது.
வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பொறியாளர், மேற்பார்வையாளர், தொழில்நுட்ப உதவியாளர், அலுவலக உதவியாளர் என, 60க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன், இங்கு இரவு நேர காவலராக பணிபுரிந்து வந்தவர், அலுவலக உதவியாளராக பதவி உயர்வு பெற்றார்.
அதில் இருந்து, இரவு நேர காவலர் பணியிடம் நிரப்பப்படாமல் இருந்தது. சுழற்சி முறையில், அலுவலக உதவியாளர்களே இரவு நேர காவலர்களாக பணியாற்றி வந்தனர்.
இதனால் அலுவலக உதவியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரிப்பதாக, கடந்த சில நாட்களுக்கு முன், நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக, புதிதாக இரவு நேர காவலர் நியமனம் செய்யப்பட்டு, பணிபுரிந்து வருகிறார்.
மேலும்
-
'சிபாகா' நிர்வாக குழு பொறுப்பேற்பு
-
இளம்பெண்ணை ஏமாற்றிய கோவை வாலிபருக்கு சிறை
-
கோவையில் அங்கீகாரம் இன்றி செயல்படும் மழலையர் பள்ளிகள்
-
சித்திரைப் பட்டத்தில் சோளம் சாகுபடி; அழைப்பு விடுக்கிறது வேளாண் துறை
-
திறந்தவெளியில் கொசுக்கடியில் உறங்கும் மக்கள்! மருத்துவமனை நிர்வாகம் மனசு வைத்து ஷெட் அமைத்தால் தேவலை
-
'சூர்யகர்' பயனாளிகள் இலக்கு 25 லட்சம்; எட்டியது 21 ஆயிரம்!