600 வலி நிவாரண மாத்திரை பறிமுதல்

திருப்பூர் : போதைக்காக பயன்படுத்த வைத்திருந்த, 600 வலி நிவாரண மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார், இருவரை கைது செய்தனர்.

வீரபாண்டி போலீஸ் எல்லைக்குட்பட்ட கல்லாங்காடு அருகே வலி நிவாரணி மாத்திரைகளை ஊசி மூலம் உடலில் செலுத்தி போதைக்கு பயன்படுத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதிக்கு சென்ற போலீசார் சோதனை செய்தனர்.

அதில், சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த மணிகண்டன், 22 மற்றும் சரண், 21 ஆகியோரை பிடித்து சோதனை செய்தனர். அதில், இருவரும் வைத்திருந்த, 600 வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்த வீரபாண்டி போலீசார், இருவரையும் கைது செய்தனர்.

Advertisement