பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு அகற்றம்

திருப்பூர் : திருப்பூர் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில், அமைக்கப்பட்டுள்ள கடை உரிமையாளர்கள், ஆக்கிரமிப்பு செய்து, பொருட்களை பரப்பி வைத்துள்ளனர். இதனால், பயணிகள் நடந்து செல்வதில் சிரமம் நிலவியது. இதுதவிர, பயணிகள் அமரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இருக்கைகளையும் சிலர் அப்புறப்படுத்தியுள்ளனர். இது குறித்து பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாநகராட்சி நிர்வாகத்துக்கு புகார் அளித்தனர்.

இதனால், பஸ் ஸ்டாண்டில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள செக்யூரிட்டிகள், மாநகராட்சி அதிகாரிகளின் உத்தரவின் பேரில், நேற்று இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, மீண்டும் பொருட்களை வைக்க கூடாது என்றனர்.

Advertisement