காஷ்மீரில் துயரத்தில் முடிந்த பிறந்த நாள்; எல்.ஐ.சி., அதிகாரி குடும்பம் வேதனை

ஸ்ரீநகர்: மனைவியின் பிறந்தநாளை கொண்டாட இந்தூரை சேர்ந்த சுனில் நதானியேல்(58), குடும்பத்தினருடன் காஷ்மீரின் பஹல்காமுக்கு சென்றார். பயங்கரவாத தாக்குதலில் கணவனை இழந்த மனைவி சோகம் அடைந்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த எல்.ஐ.சி., கிளை மேலாளர் சுஷில் நதானியேல் (58) என்பவர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளார்.
அவரது மகள் அகன்ஷா (30), பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார். அதே நேரத்தில் அவரது மனைவி ஜெனிபர் (54) மற்றும் மகன் ஆஸ்டின் (21) ஆகியோர் உயிர் தப்பினர்.
ஏப்ரல் 21ம் தேதி மனைவி ஜெனிபரின் பிறந்தநாளைக் கொண்டாட குடும்பத்தினருடன் சுஷில் காஷ்மீருக்கு சென்றிருந்தார். இன்ப சுற்றுலா மனவேதனையில் முடிந்தது. அப்பாவை துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் மனவேதனை அளிக்கிறது என மகள் கூறிய சம்பவம் குடும்பத்தினரை கண்கலங்க வைத்தது.
மத்தியப் பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டம் ஜோபாட் பகுதியைச் சேர்ந்த சுஷில், தற்போது சொந்த ஊரில் எல்.ஐ.சி., கிளை மேலாளராக பணியாற்றி வந்தார். அவரது மனைவி ஆசிரியையாக பணியாற்றுகிறார். மகள், சூரத்தில் பேங்க் ஆப் பரோடா வங்கி ஊழியர். மகன் படித்துக் கொண்டிக்கிறார்.
உறவினர்கள் வேதனை
"ஈஸ்டர் தினத்தன்றுதான் அவருக்கு வாழ்த்துச் சொல்லி பேசினேன். பயங்கரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டில் நாம் இன்னும் எத்தனை பேரை இழக்க வேண்டும். பயங்கரவாதிகளை அந்த இடத்திலேயே சுட்டுக்கொல்ல வேண்டும்" என்று சுஷிலின் உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.


மேலும்
-
தண்டவாளத்தில் ஜல்லி கற்களை பிரிக்கும் இயந்திரம் நிறுத்த 'ஷெட்' அமைப்பு
-
ஒரு வேளை சாப்பாடு; ஒரே ஒரு உடை மதுரை தொழிலதிபருக்கு கொடுமை
-
பாலக்கோட்டில் பைனான்சியரை கடத்த முயன்ற வெளிமாநில கூலிப்படையினர் 5 பேர் கைது
-
சரக்கு வாகனம் மீது டூவீலர் மோதி விபத்து மூளை சிதறி கல்லுாரி மாணவர்கள் பலி
-
இன்று இனிதாக ...(24.04.2025) திருவள்ளூர்
-
பெருந்துறையில் சட்ட விரோத குடியேற்றம் பங்களாதேஷ் வாலிபர்கள் 7 பேர் கைது