அரசுடன் அதிகார மோதல் இல்லை; கவர்னர் மாளிகை தகவல்

2

சென்னை: ''துணை வேந்தர்கள் மாநாடு விவகாரத்தில் மாநில அரசுடன் அதிகார மோதல் இல்லை'' என கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.


ஊட்டியில் ஏப்ரல் 25,26ம் தேதிகளில் நடக்க உள்ள துணை வேந்தர்கள் மாநாடு குறித்து கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: துணை வேந்தர்கள் மாநாடு விவகாரத்தில் மாநில அரசுடன் அதிகார மோதல் இல்லை. கவர்னர் மற்றும் மாநில அரசுகள் இடையே அதிகார போட்டியில்லை. கல்வி வளர்ச்சி, கல்விக்கான திட்டமிடல் தொடர்பாகவே துணைவேந்தர்கள் மாநாடு நடத்தப்படுகிறது.

பல்கலை துணை வேந்தர்கள் மாநாடு தவறான நோக்கத்துடன் அரசியல் தொடர்புபடுத்தப்படுகிறது. துணைவேந்தர்கள் மாநாட்டுடன் உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்புப்படுத்தி தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. 2022ம் ஆண்டு முதல் ஏப்ரல் மாதத்தில் உயர் கல்வி நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் மாநாடு நடைபெறுகிறது.



தமிழக மாணவர்கள் பலன் அடையும் வகையில் இந்திய அளவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களை மாநாட்டிற்கு அழைத்து வருகிறோம். துணை வேந்தர்கள் மாநாடு தொடர்பான ஏற்பாடுகள் ஜனவரியில் இருந்தே செய்யப்பட்டு வருகிறது. துணைவேந்தர் மாநாட்டை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement