ராகு, கேது பெயர்ச்சி விழா அர்ச்சனைக்கு 4,000 பேர் புக்கிங்



கோபி:கோபி, பச்சைமலையில் நடக்கும் ராகு, கேது பெயர்ச்சி விழாவில், பரிகார அர்ச்சனைக்கு 4,000 பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

கோபி, பச்சைமலையில் ஏப்.,26ல் ராகு, கேது பெயர்ச்சி விழா நடக்கிறது. அன்று காலை 9:00 முதல், 11:00 மணி வரை ராகு, கேது, பரிகார ேஹாமம் நடக்கிறது. அதையடுத்து மதியம், 1:00 மணிக்கு நடக்கும் பரிகார அர்ச்சனைக்கு, கடந்த மார்ச், 30ம் தேதி முதல், 20 ரூபாய் கட்டணம் செலுத்தி பக்தர்கள் முன்பதிவு செய்து வருகின்றனர். ராகு, கேது பெயர்ச்சி விழாவுக்கு, இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில், நேற்று வரை மொத்தம் 4,000 பக்தர்கள் பரிகார அர்ச்சனைக்கு முன்பதிவு செய்துள்ளனர்.

Advertisement