விவசாய நிலவழிச் சாலை சீர் செய்ய வலியுறுத்தல்

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது உள்ளாவூர் கிராமத்தில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரிநீர் பாசனத்தைக் கொண்டு, ஏரிக்கு அருகாமையிலான பல ஏக்கர் நிலப்பரப்பில் அப்பகுதி விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர்.

ஏரிக்கரையொட்டி உள்ள விவசாய நிலங்களுக்கு, விவசாயம் சார்ந்த பணிகளுக்காக டிராக்டர், மாட்டு வண்டி, டில்லர் இயந்திரம் உள்ளிட்ட வாகனங்கள் இயக்குவதில் விவசாயிகளுக்கு சிரமம் இருந்தது.

இதனால், விளை நிலங்களுக்கு மத்தியில் சாலை வசதி ஏற்படுத்த அப்பகுதி விவசாயிகள் தீர்மானித்தனர்.

அதன்படி, சில ஆண்டுகளுக்கு முன், அப்பகுதி விவசாயிகளது நிலங்களின் சில பகுதிகளை ஒருங்கிணைத்து குறுகியதான சாலை ஏற்படுத்தப்பட்டது.

நாளடைவில் அச்சாலை சிதிலமடைந்து, மழைக்காலத்தில் சகதியாகி வந்தது.

எனவே, உள்ளாவூர் விளை நிலங்களுக்கு இடையிலான சாலையை கான்கிரீட் சாலையாக ஊராட்சி நிர்வாகம் வாயிலாக சீரமைக்க அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement