எஸ்.ஐ.,தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்


ஈரோடு:ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில், அனைத்து அரசு துறை தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

சீருடை பணியாளர் தேர்வாணையத்தால், நேரடி போலீஸ் எஸ்.ஐ., பணிக்கான போட்டி தேர்வு நடக்க உள்ளது. இதற்கான பயிற்சி வகுப்பு நேற்று துவங்கியது. துவக்க நாளில், 25 பேர் பதிவு செய்து பயிற்சி வகுப்பில் பங்கேற்றனர். வேலைவாய்ப்பு துறை உதவி இயக்குனர் ராதிகா பயிற்சியை துவக்கி வைத்தார்.

இங்கு பயிற்சி பெறுவோருக்கு, தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. ஸ்மார்ட் போர்டு, இலவச வைபை வசதி, போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் படிக்கும் வசதி, பொது அறிவுக்கான மாத இதழ்கள், பயிற்சி கால அட்டவணை, தினமும் சிறு தேர்வு, வாராந்திர தேர்வு, இணைய வழி தேர்வு, முழு மாதிரி தேர்வு, மென்பாடக்குறிப்புகள் எடுத்து கொள்ள இணைய தளத்துடன் கூடிய கணினி வசதியுடன் பயிற்சி வகுப்பு உள்ளது. இங்கு பயிற்சி பெற்ற பலரும் அரசு பணிக்கு தேர்வாகி உள்ளனர். அவ்வாறு தேர்வானவர்களும், இதுபோன்ற பயிற்சி வகுப்புகளுக்கு வந்து, பயிற்சி வழங்கி வருகின்றனர்.

Advertisement