பைக் மோதி விபத்து மினி பஸ் கண்டக்டர் சாவு


மோகனுார்:

மோகனுார் அடுத்த அணியாபுரம், கீழ்பரளி காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணன், 25; தனியார் மினி பஸ் கண்டக்டர். இவர், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, பணி முடிந்து வீட்டிற்கு கிளம்பினார். கணவாய்பட்டி பஸ் ஸ்டாப்பில் இருந்து நடந்தபடி சாலையை கடக்க முயன்றார். அப்போது, நாமக்கல் அருகே, குஞ்சாம்பாளையத்தை சேர்ந்த ரவிச்சந்திரன், 29, என்பவர் ஓட்டி வந்த, 'ஹோண்டா' டூவீலர் கிருஷ்ணன் மீது மோதியது.

இந்த விபத்தில், படுகாயமடைந்த இருவரையும், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கிருஷ்ணன் உயிரிழந்தார். ரவிச்சந்திரனுக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மோகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement