மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி


வெண்ணந்துார்:
வெண்ணந்துார் யூனியன், ஆர்.புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சார்பில், மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி, தலைமை ஆசிரியர் ஜாய்சி அன்னம்மாள் தலைமையில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பள்ளியில் இருந்து புறப்பட்ட பேரணி, பிரதான வீதி, சாலைகளில் சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது. ஊர்வலத்தில், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தரத்தை உயர்த்தும் விதமாக, இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், நான் முதல்வன், தற்காப்பு கலை பயிற்சி, இலக்கிய மன்றம், வானவில் மன்றம், கலைத்திருவிழா மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்துவது குறித்து துண்டு பிரசுரங்களை வீடு, கடைகளில் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், மாணவ, மாணவியர், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement