குடிநீர் பற்றாக்குறை பொதுமக்கள் அவதி


வெண்ணந்துார்:
ஆர்.புதுப்பாளையம் பஞ்., பகுதியில் குடிநீர் பற்றாக்குறையால், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
வெண்ணந்துார் ஒன்றியத்துக்குட்பட்ட ஆர்.புதுப்பாளையம் பஞ்., பகுதியில், 5,000 பேர் வசித்து வருகின்றனர். இதில், 9வது வார்டு பகுதியில், 2,000 குடியிருப்புகளில், 1,000க்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் உள்ளன. காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் கிடைக்க வேண்டிய நீர்வரத்து குறைந்துள்ளது.
இதனால், ஆர்.புதுப்பாளையம் பஞ்., பகுதிகளுக்கு, 30 நாட்களுக்கு மேலாகியும் குடிநீர் வழங்குவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. தற்போது கோடை வெயில் மக்களை வாட்டி வதைக்கும் நிலையில், குடிநீர் பற்றாக்குறையால், சிலர் ராசிபுரம் சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர். சிலர், கட்டணம் கொடுத்து குடிநீர் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும்.

Advertisement