ரேஷன் கடையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது

கடலுார்:கடலுார் அருகே சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்தவர் நாகராஜ், 42; ரேஷன் கடை விற்பனையாளர். அவருக்கு, 2022ம் ஆண்டு, சென்னையைச் சேர்ந்த பாஸ்கர், 58, அறிமுகமானார். சென்னை தலைமை செயலகத்தில் உள்ள முக்கிய நபர்களுடன் தனக்கு தொடர்பிருப்பதாகக் கூறிய பாஸ்கரை, நாகராஜ் நம்பினார்.

தன் மனைவி மற்றும் அதே ஊரைச் சேர்ந்த மேலும் இருவருக்கு, கிராம உதவியாளர் மற்றும் ரேஷன் கடை விற்பனையாளர் வேலை வாங்கித் தருமாறு கேட்டுள்ளார்.

அதற்கு, பாஸ்கர், 7 லட்சம் ரூபாய் கேட்டார். ஆறு தவணைகளில், 5.50 லட்சம் ரூபாயை பாஸ்கரிடம், நாகராஜ் கொடுத்துள்ளார். பாஸ்கர் வேலையும் வாங்கித் தராமல், பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றி வந்தார்.

கடலுார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் நாகராஜ் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, சென்னை, புரசைவாக்கத்தைச் சேர்ந்த பாஸ்கரை கைது செய்தனர்.

Advertisement