பெண்ணின் ஆபாச வீடியோவை மாப்பிள்ளைக்கு அனுப்பியவர் கைது

மூணாறு:இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வீடியோவை, பெண்ணுடன் திருமணம் நிச்சயித்தவருக்கு அனுப்பிய, கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், மூணாறு அருகே நல்லதண்ணி எஸ்டேட், குருமலை டிவிஷனைச் சேர்ந்தவர் கணேஷ்குமார், 35; மூணாறு நகரில் ஜி.எச்., ரோட்டில், கம்ப்யூட்டர் சென்டர்கள் நடத்தி வருகிறார். இங்கு வேலை செய்த இளம்பெண்ணை, அவர் பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோவாக பதிவு செய்து வைத்துள்ளார்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையறிந்த கணேஷ்குமார், பெண்ணை பலாத்காரம் செய்தபோது எடுத்த வீடியோவை, அப்பெண்ணுக்கு நிச்சயிக்கப்பட்டவருக்கு அனுப்பினார். அதனால், திருமணம் தடைபட்டது. பாதிக்கப்பட்ட பெண், மூணாறு போலீசில் அளித்த புகாரில், போலீசார், கணேஷ் குமாரை கைது செய்தனர்.
விசாரணையில், கீழ்தளத்தில் உள்ள கம்ப்யூட்டர் சென்டரில் அமைத்துள்ள படுக்கை அறையில், இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. கம்ப்யூட்டர் சென்டர்களில் போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அவரால் இதேபோன்று வேறு யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளனரா என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும்
-
2 நாட்களில் சவரனுக்கு தங்கம் விலை ரூ.2,280 சரிவு; ஒரு சவரன் ரூ.72,040!
-
பரத் என்ற பெயரைக் கேட்டதும் கொக்கரித்த பயங்கரவாதிகள்!
-
கடலூரில் ரூ.40 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்; சிக்கிய நவீத் அன்வரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை
-
சிந்து நதிநீர் ஒப்பந்தம் முறிப்பு; பாகிஸ்தானுக்கு வலிக்கும் இடத்தில் அடிக்கிறது இந்தியா!
-
காஷ்மீரில் இருந்து பத்திரமாக தமிழகம் திரும்பிய சுற்றுலாப் பயணிகள்; சொல்வது இதுதான்!
-
சில்லுகளை 'ஜில்'லாக்கும் லேசர்கள்