பராமரிப்பில்லாத 'அம்மா' பூங்கா மதுக்கூடமாக மாறிய அவலம்

வெங்கத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட வெங்கத்துார் ஊராட்சியில், 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 'அம்மா' பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணி, 2018 பிப்ரவரி மாதம் துவங்கி, 2020ம் ஆண்டு நிறைவடைந்தது.
இந்த பூங்காவில் உடற்பயிற்சி உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. போதிய பராமரிப்பு இல்லாததால், பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் முழுதும் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன.
மேலும், விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்து வீணாகி வருகின்றன. இதனால், 'குடி'மகன்கள் பூங்காவை மதுக்கூடமாக மாற்றி விட்டனர். இது, அப்பகுதிவாசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, 'அம்மா' பூங்காவை சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பரத் என்ற பெயரைக் கேட்டதும் கொக்கரித்த பயங்கரவாதிகள்!
-
கடலூரில் ரூ.40 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்; சிக்கிய நவீத் அன்வரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை
-
சிந்து நதிநீர் ஒப்பந்தம் முறிப்பு; பாகிஸ்தானுக்கு வலிக்கும் இடத்தில் அடிக்கிறது இந்தியா!
-
காஷ்மீரில் இருந்து பத்திரமாக தமிழகம் திரும்பிய சுற்றுலாப் பயணிகள்; சொல்வது இதுதான்!
-
சில்லுகளை 'ஜில்'லாக்கும் லேசர்கள்
-
வைரஸ்களை கொல்லும் மொச்சை
Advertisement
Advertisement