மூதாட்டியை பலாத்காரம் செய்து கொல்ல முயற்சி

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த 60 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்து கொல்ல முயன்ற டிரைவர் மணிகண்டனுக்கு 31, பத்து ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

வத்திராயிருப்பு அருகே கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். 2022 ஜன.20 ல் இவர் அதே பகுதியைச் சேர்ந்த 60 வயது மூதாட்டியின் வீடு புகுந்து பலாத்காரம் செய்து கொலை செய்ய முயன்றுள்ளார். கூமாபட்டி போலீசார் இவரை கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்துார் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. இதில் மணிகண்டனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 14 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்தார்.

Advertisement