சிறு கனிம நில வரி உயர்வு ரத்து செய்யணும்: பன்னீர்

சென்னை: 'முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை:

கடந்த சில நாட்களாக, தமிழக கல் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள், காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அவர்களுடன் பேசிய தி.மு.க., அரசு, அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல், புதிய வரி விதிப்புக்கு ஏற்ப ஜல்லி, 'எம்-சாண்ட், பி-சாண்ட்' ஆகியவற்றின் விலையை உயர்த்த அனுமதி அளித்துள்ளது. அதனால், ஜல்லி, 'எம்-சாண்ட், பி-சாண்ட்' விலை, உயர்ந்து உள்ளன.

தி.மு.க., அரசுக்கு மக்கள் மீது அக்கறை இருக்குமானால், புதிதாக விதிக்கப்பட்டுள்ள சிறு கனிம நில வரியை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி, கிரஷர் உரிமையாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம்.

ஆனால், அதை செய்யாமல், மக்கள் மீது கூடுதல் நிதிச்சுமையை சுமத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.

எனவே, சிறு கனிம நில வரியை ரத்து செய்து, ஜல்லி, எம்-சாண்ட் மற்றும் பி-சாண்ட் விலை உயர்வை தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement