கடத்தல்காரர்கள் எனக்கு தந்தது ஒரு உடை, ஒரு வேளை சாப்பாடு; மீட்கப்பட்ட மதுரை தொழிலதிபர் பேட்டி

மதுரை: ''சொத்துக்கான கடத்தப்பட்ட என்னை கடத்தல்காரர்கள் அடித்ததோடு, ஒரு உடையும், ஒரு வேளை சாப்பாடும் மட்டும் தந்தனர்'' என 12 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட மதுரை தொழிலதிபர் கருமுத்து சுந்தரம் தெரிவித்தார்.
மதுரை நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் கருமுத்து சுந்தரம் 58. மதுரையில் கல்வி நிறுவனங்கள், மில்களை உருவாக்கிய கருமுத்து தியாகராஜர் குடும்பத்தைச் சேர்ந்தவர்.இவரது குடும்பத்திற்கு சொந்தமானதிண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரூ.பல கோடி மதிப்புள்ள 6 ஏக்கர் சொத்தைதிண்டுக்கல்மரியராஜ் 70, என்பவர் அபகரிக்க திட்டமிட்டு ஏப்.,6ல்கூட்டாளிகளுடன் சேர்ந்து கடத்தினார்.
தினமும் ஒவ்வொரு இடம் வீதமாகமகாராஷ்டிரா, நாக்பூர், ஆந்திரா, பெங்களூரு எனகடத்திச்சென்றனர். மதுரை போலீசார் தொடர்ந்து கண்காணித்து ஏப்.18 ல் மீட்டனர். இதுதொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
நமது நிருபரிடம் சுந்தரம் கூறியதாவது:
ஒவ்வொரு இடமாக அழைத்துச்சென்றனர். மருந்து, மாத்திரை எடுத்துச்செல்லாததால் சிரமப்பட்டேன். ஒரு வேளை உணவு மட்டுமே தந்தனர். அதேசமயம் அவர்கள் தினமும் மது அருந்தினர்.
கடத்தியதும் என்னை கம்பால் காலில் அடித்தனர். பிறகு அவ்வப்போது அடிப்பது போல் மிரட்டினர். காலில் அடிக்காமல் தரையில் கம்பை ஓங்கி அடித்து பயமுறுத்தினர். நான் எதற்கும் பயப்படவில்லை.
அவர்களிடம் இருந்த 12 நாளில் ஒரு புது ஆடை மட்டும் வாங்கிக்கொடுத்தனர். அதைதான் மாற்றி மாற்றி அணிந்து சமாளித்தேன். இவ்வாறு கூறினார்.
மேலும்
-
பயங்கரவாதிகளை ஆதரிக்கும் படுபாதக பாகிஸ்தான் மீது என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம்?: இங்கு எழுதுங்கள் வாசகர்களே...
-
காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை; ராணுவ வீரர் வீரமரணம்
-
கொடூர தாக்குதலை உடல் கேமராவில் பதிவு செய்த பயங்கரவாதிகள் நோக்கம் என்ன?
-
காஷ்மீர் கொடுஞ்செயலுக்கு பொறுப்பேற்பு: யார் இந்த 'தி ரெசிஸ்டென்ட் ப்ரென்ட்?
-
2 நாட்களில் சவரனுக்கு தங்கம் விலை ரூ.2,280 சரிவு; ஒரு சவரன் ரூ.72,040!
-
பரத் என்ற பெயரைக் கேட்டதும் கொக்கரித்த பயங்கரவாதிகள்!