டி.ஆர்.எப்., பயங்கரவாதி காஷ்மீரில் சுற்றிவளைப்பு
ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரின் குல்காமில் நடந்த பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையில் டி.ஆர்.எப்., எனப்படும் 'தி ரெசிஸ்டன்ட் பிரன்ட்' பயங்கரவாத அமைப்பின் தளபதி சுற்றிவளைக்கப்பட்டார்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், நேற்று முன்தினம் அப்பாவி பொதுமக்கள் மீது டி.ஆர்.எப்., பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.
பஹல்காமில் இருந்து 60 கி.மீ., தொலைவில் உள்ள குல்காம் பகுதியில் டி.ஆர்.எப்., பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. தங்மார்க் பகுதியில் அவர்கள் பதுங்கியிருந்தனர்.
அங்கு ராணுவத்தினர் சென்ற போது, பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இரு தரப்பிலும் சில நிமிடங்களுக்கு துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இறுதியில் டி.ஆர்.எப்., பயங்கரவாத அமைப்பின் தளபதியை ராணுவத்தினர் சுற்றி வளைத்து கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவரிடம் பஹல்காம் சம்பவம் மற்றும் பயங்கரவாத அமைப்பின் திட்டங்கள், பதுங்கி உள்ள இடங்கள் குறித்து விசாரணை நடத்த உள்ளனர்.
முன்னதாக பாரமுல்லா மாவட்டம், உரி நலா பகுதிக்குள் மூன்று பயங்கரவாதிகள் நேற்று காலை ஊடுருவ முயன்றனர்.
அப்போது பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. ஒரு மணி நேரம் நீடித்த மோதலில், இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மேலும்
-
பாகிஸ்தான் துாதரகத்துக்குள் கொண்டு செல்லப்பட்ட கேக்; உச்ச கட்ட கோபத்தில் இந்தியா!
-
கருணாநிதி பெயரில் புதிய பல்கலை; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
-
டில்லியில் பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பு வாபஸ்; அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கை
-
பாக்., அரசின் எக்ஸ் தளப்பக்கம் இந்தியாவில் முடக்கம்
-
பயங்கரவாதிகளை ஆதரிக்கும் படுபாதக பாகிஸ்தான் மீது என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம்?: இங்கு எழுதுங்கள் வாசகர்களே...
-
காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை; ராணுவ வீரர் வீரமரணம்